close
Choose your channels

நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமான ’கரகாட்டக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ராமராஜன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்த ‘கரகாட்டக்காரன்’ படம் மட்டுமல்லாமல் பல நூறு நாட்கள் படங்களைத் தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.