நாம் அனைவருமே குற்றவாளிகள்: சுஜித் மரணம் குறித்து உதயநிதி

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமட்த்தை சேர்ந்த சிறுவன் சுஜித் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த சிறுவனுக்காக அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவனுக்கு இரங்கலும் அவனுடைய பெற்றோர்களுக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சுஜித்தின் மரணம் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாலருமான உதயநிதி கூறியபோது, ‘சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். 'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள். என்று பதிவு செய்துள்ளார்.

More News

சுஜித் இழப்பை ஈடுகட்ட பெற்றோர்களுக்கு ராகவா லாரன்ஸ் கூறிய யோசனை!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித், நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டு தற்போது மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டான்.

முதல் காதலியை இன்று வரை தேடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: சுஜித்தின் உயிர் கடைசியாக இருக்கட்டும்! 

மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து இன்னொரு சிறுவன் இன்று பலியாகியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் இதே போல் இழக்கப்பட்டிருந்த நிலையிலும்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் போலீசார்

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக

மீண்டும் மண்ணுக்குள் சென்ற சுஜித்: கண்ணீருடன் புதைக்கப்பட்ட உடல்!

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரைக் காப்பாற்ற எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சுஜித்தின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது