close
Choose your channels

'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு: மாரி செல்வராஜ் செய்த மரியாதை!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

’மாமன்னன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்று வைகைப்புயல் வடிவேலு இணைந்தார். இதனை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை வரவேற்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’மாமன்னன்’ படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.