ரூ.3 கோடி கடனுக்கு ரூ.4 கோடி வட்டி: விமல் புகாரால் தயாரிப்பாளர் மீது வழக்கு!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

ரூபாய் மூன்று கோடி வாங்கிய கடனுக்காக நான்கு கோடி ரூபாய் வட்டி கட்டியதாக தன்னிடம் கூறி தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது நடிகர் விமல் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த திரைப்படம் ’மன்னார் வகையறா’. இந்த படம் பண பிரச்சனை காரணமாக நின்று விட்டதை அடுத்து பைனான்சியர்கள் மூலம் படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க ரூபாய் 3 கோடி செலவானதாகவும், ஆனால் இந்த படம் 4 கோடி மட்டுமே வசூல் ஆனதாகவும், தயாரிப்பாளர் சிங்காரவேலன் விமலிடம் தெரிவித்துள்ளார். மேலும் வசூல் செய்த 4 கோடியும், இந்த படத்திற்கு கடனாக வாங்கிய ரூ.3 கோடிக்கு வட்டி செலுத்தவே சரியாகிவிட்டதாகவும் சிங்காரவேலன் விமலிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தயாரிப்பாளரின் அசல் 3 கோடி பணத்திற்காக அவருக்கு விமல் வேறு ஒரு படம் நடித்து கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ’மன்னார் வகையறா’ திரைப்படம் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை சேர்த்து மொத்தம் 8 கோடி வசூல் செய்ததாகவும் அந்த கணக்கை மறைத்து தன்னிடம் தயாரிப்பாளர் மோசடி செய்து உள்ளதாகவும், இதற்கு ஃபைனான்சியர்களும் உடந்தை என்றும், நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More News

6 மாதத்தில் 37 கிலோ உடல் எடை குறைப்பு.....! சீரியலில் சாதிக்கும் நடிகை....!

முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான "தேன் நிலவு" சீரியல் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கிருத்திகா.

ஒரே படம் இயக்கிய தமிழ் இயக்குனர் வாங்கிய ஆடி கார்: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கிய இயக்குனர் ஒருவர் ஆடி கார் வாங்கி உள்ளதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

ஊருக்குத்தான் உபதேசம்? கேப்டன் கோலியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலி சொதப்பலாக விளையாடியது குறித்து முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புரண்டு கதறி அழுத பெற்றோர்....! இரக்கமில்லாமல் பரிதவிக்க விட்டு சென்ற மகள்....!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா பகுதியில் உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் பச்சியப்பன், சிந்தாமணி தம்பதி. 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர்களது மகள் பவதாரணியும்

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்போல: சிவகார்த்திகேயன் டுவிட்

நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், நாங்க இனிமேல் சங்கத்துக்கு இனி வேற செயலாளர் தான் பாக்கணும் போல