close
Choose your channels

முழுக்க முழுக்க ஆன்மீகவாதியாக மாறிவிட்ட அமலாபால்.. வைரல் புகைப்படங்கள்!

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் முழுக்க முழுக்க ஆன்மீகவாதியாக மாறி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தமிழில் ’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால் அதன் பின் ’வேட்டை’ ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ’தலைவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’கடாவர்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து தற்போது அவர் சுமார் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பழனியில் குடமுழுக்கு விழா நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு தனது தாயார் மற்றும் தோழியுடன் சென்ற அமலா பால், பழனி கோவிலில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் நெற்றியில் விபூதி குங்குமம் அணிந்து ஒரு முழுமையான ஆன்மீகவாதி போலவே தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் நடிகை அமலா பால் எர்ணாகுளத்தில் உள்ள கோவிலுக்கு சென்றபோது கோவில் நிர்வாகிகள் அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதிக்கவில்லை என்பதை மன வேதனையுடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment