நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரியாகும் 'வாம்மா மின்னல்' நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

சரத்குமார் நடித்த ’மாயி’ என்ற திரைப்படம் கடந்த 2000ம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் வடிவேலு பெண் பார்க்க வரும் காட்சியில் ’வாம்மா மின்னல்’ என்று கூறும் போது மின்னல் வேகத்தில் வந்து செல்லும் நடிகையை யாராலும் மறந்திருக்க முடியாது. அவரது பெயர் தீபா.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை தீபா ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். சரத்குமார் நடித்த ’மாயி’ திரைப்படம் தனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தாலும் அதன் பிறகு வாய்ப்புகள் வரவில்லை என்றும் தற்போது சசிகுமாரின் ’ராஜ வம்சம்’ படத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் நடந்த ’ராஜ வம்சம்’ படத்தின் புரமோஷன் விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தனக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று தனக்கு வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் கதிர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

சசிகுமாரின் ’ராஜ வம்சம்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீண்டநாள் கனவு நனவாகிவிட்டது: பூஜா ஹெக்டேவின் சந்தோஷமான பதிவு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையும், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கனவு நனவாகி விட்டதாக பதிவு செய்துள்ளார்.

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர் இவர்கள் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே

புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

வங்கக் கடலில் கடந்த இரண்டு வாரங்களாக 2 காற்றழுத்த தாழ்வு மையங்கள் தோன்றி, அவை இரண்டுமே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்று கரையை கடந்தது என்பதும் இதன் காரணமாக சென்னை

மாணவியாக மாறிய பிரியங்காவை அதிகாரம் செய்யும் ராஜூ: பிக்பாஸ் புதிய டாஸ்க்!

விஜய் டிவியில் கடந்த 50 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் மூன்று புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே

திடீரென உள்ளே வந்த வைல்ட்கார்ட் போட்டியாளர்: யார் இவர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களையும் தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சில போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும்