close
Choose your channels

நீண்டநாள் கனவு நனவாகிவிட்டது: பூஜா ஹெக்டேவின் சந்தோஷமான பதிவு!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையும், தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கனவு நனவாகி விட்டதாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்பட பலருடன் நடித்து விட்டார். அதேபோல் அக்ஷய் குமார் உள்பட பல பாலிவுட் நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள பூஜா ஹெக்டே, தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது நனவாகி விட்டதாக அறிவித்து உள்ளார். மேலும் அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருவதாகவும் கூறி அதுகுறித்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.