close
Choose your channels

குழந்தை முதல் குமரி வரை.. தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! க்யூட் புகைப்படங்கள்..!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தனர் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் தங்கள் தந்தையுடன் இருந்த புகைப்படமும் விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது தந்தையின் மடியில் குழந்தையாக இருப்பது முதல் குமரியாக இருப்பது வரை மடியில் உட்கார்ந்து இருந்த புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் ’போலோ சங்கர்’, ‘சைரன்’, ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment