இந்த தேதிய டைரில குறிச்சு வச்சுக்கோங்க, உலகத்தில எங்க இருந்தாலும் வந்துருங்க: குஷ்பு

  • IndiaGlitz, [Friday,September 16 2022]

செப்டம்பர் 24ஆம் தேதியை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் திருச்சிக்கு வந்து விடுங்கள் என்றும் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருமே இசை நிகழ்ச்சியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. சமீபகாலங்களில் இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் இசைநிகழ்ச்சி நடந்தது என்பதை அறிந்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக கார்த்திக் ராஜா திருச்சியில் வரும் 24ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாக நடத்த உள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சியில் இந்த இசை கச்சேரி நடைபெற இருப்பதாகவும் இதில் முன்னணி பாடகர்கள் பாட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை தான் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம் திருச்சி என்றும் தானும் திருச்சியில் நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தேதியை நீங்கள் உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொண்டு தவறாமல் வந்து இந்த இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் சாதனா சர்கம், ஹரிஹரன், குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

கருப்பு காஸ்ட்யூமில் செம கிளாமர்.. ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஷூட்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்

நாளைக்கு நம்ம போட்டோ பேப்பர்ல வந்துடும்ல்ல.. வைபவ் நடித்த 'பபூன்' டிரைலர்

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான 'பபூன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று

'வெந்து தணிந்தது காடு' முதல்நாள் வசூல்: சிம்பு-கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியின் சாதனை

சிம்பு, ஏஆர் ரகுமான் மற்றும் கவுதம் மேனன் ஆகிய மூவரும் சேர்ந்த கூட்டணியில் உருவாகும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று வெளியான 'வெந்து தணிந்தது காடு'

தீபாவளிக்கு 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. பாடியவர்கள் இந்த பிரபலங்களா?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' சாட்டிலைட், டிஜிட்டல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட அதிகமா இருக்கே!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை