இளைய திலகத்திற்கு இன்ஸ்டாவில் வாழ்த்து பகிர்ந்த முன்னணி நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமான இளைய திலகம் நடிகர் பிரபு தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். இவருக்கு 90களில் இருந்து தமிழின் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மீனா தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோர்களின் மகனான நடிகர் பிரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் முன்னணி நடிகராக அறியப்படுகிறார். கடந்த 1982 ஆம் ஆண்டு “சங்கிலி” எனும் திரைப்படத்தில் அறிமுகமான இவர் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து, தொடர்ந்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான “மரக்கர்“ திரைப்படத்தில் நடிகர் பிரபு தனது தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்திலும் இயக்குநர் கவின் எம் என்பவர் இயக்கிவரும் “வேலன்“ எனும் திரைப்படத்திலும் இவர் இணைந்து நடித்துவருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபு தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு நடிகை மீனா தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு ஒரு புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். நடிகை மீனா நடிகர் பிரபுவுடன் இணைந்து “ராஜகுமாரன்“ போன்ற ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments