கணவர் மறைவுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் மீனா.. மேக்கப் போடும் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Saturday,December 24 2022]

நடிகை மீனாவின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவர் கணவர் மறைவுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேக்கப் போடும் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவாஜி கணேசன் நடித்த ’நெஞ்சங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதன்பிறகு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நாயகியாக மாறிய மீனா, ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ ’எஜமான்’ கமல்ஹாசன் நடித்த ’அவ்வை சண்முகி’ அஜித் நடித்த ’சிட்டிசன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து அவர் பெரும் சோகத்துடன் இருந்த நிலையில் அவருடைய திரையுலக தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடித்த இன்னொரு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

 'வெண்ணிலா கபடிகுழு' திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகர்

'வாரிசு',  'துணிவு' பொங்கலுக்கு முதலில் எந்த படம் பார்ப்பீங்க? -வடிவேலு பதில்!

 விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் நாளில் வெளியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு படங்களையும் பார்க்க விஜய், அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் 

தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்: எச் வினோத் அடுத்த படம் குறித்த மாஸ் தகவல்

தனுஷ் இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் அவரை நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் எச் வினோத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது.. த்ரிஷாவின் 'ராங்கி' டிரைலர்

த்ரிஷா நடித்த 'ராங்கி' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்கணும்: சேரனின் 'தமிழ்க்குடிமகன்' டீசர்

 நீண்ட இடைவேளைக்கு பின்னர் சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்'  என்ற படத்தின் டீசர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.