நடிகை மேக்னா ராஜின் அம்மா, கமல்-ரஜினி பட நடிகையா? ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2022]

பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்பதும் அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னாராஜ்க்கு அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது மேக்னா ராஜ் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை மேக்னா ராஜ் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். மேக்னாராஜின் அம்மா பரிமளா ஜோஷ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சில படங்களிலும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது தான் அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

ரஜினிகாந்த், சரிதா நடிப்பில் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’தப்புத்தாளங்கள்’ என்ற படத்தில் மேக்னா ராஜின் அம்மா பரிமளா ஜோஷ் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி வது விஜயகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற படத்திலும் வைதேகி என்ற கேரக்டரில் இவர் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகள் தான் மேக்னாராஜ் என்ற தகவல் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

'பொன்னியின் செல்வன்' முக்கிய கேரக்டரின் புகைப்படம் லீக்: படக்குழு அதிர்ச்சி!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை

குழந்தை நட்சத்திரங்களுடன் 'வாரிசு' விஜய்: மாஸ் செகண்ட்லுக்

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து மிகப்பெரிய

'வாரிசு' விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்: மாஸ் புகைப்படம்!

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும், நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாடகி சின்மயி வீட்டுக்கு வந்த இரட்டை புதுவரவு: ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சின்மயி வீட்டுக்கு இரட்டை புதுமுகங்கள் வந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்த நடிகை: குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.