close
Choose your channels

'வாரிசு' விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்: மாஸ் புகைப்படம்!

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும், நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இயக்குனர் வெங்கட்பிரபு, அனிருத், லோகேஷ் கனகராஜ், கலைப்புலி எஸ், தாணு உள்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன் தளபதி விஜய்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ’வாரிசு’ திரைப்படத்திற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட மாஸ் புகைப்படம் ஒன்றையும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.