close
Choose your channels

நடிகை குஷ்புவுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைரலாகும் புகைப்படங்கள்

Friday, January 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பு தனக்கு ஒரு விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பிசியாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டு வருவார். அந்த வகையில் பயணம் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்த போது திடீரென காலில் காயப்பட்டுவிட்டதாகவும் இதனால் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் காயம் இருந்தாலும் தன்னுடைய பயணத்தை நிறுத்தப் போவதில்லை என்று கூறிய அவர் சாதிக்கும் வரை பயணம் செய்வேன் என்று தெரிவித்து பயணித்துக்கான ஏற்பாடுகளை செய்யும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குஷ்பு சென்ற கார் விபத்திற்குள்ளாகி லேசான காயம் ஏற்பட்டது என்பதும் அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னால் அவருடைய கண்ணில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் காயமடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.