இதெல்லாம் ரொம்ப ஓவர்.. விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்திக்கு ராஷ்மிகாவின் ரியாக்சன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா திருமணம் செய்து கொண்டதாகவும் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும் வெளியான செய்திக்கு ’இதெல்லாம் ரொம்ப ஓவர், அதீதமான கற்பனை’ என ராஷ்மிகா தனது ரியாக்ஷனை தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாக தெலுங்கு திரை உலகில் பல வதந்திகள் உலவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு ஏற்கனவே மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை ராஷ்மிகா பதில் அளித்த நிலையில் தற்போது ஊடகத்தில் வெளியான செய்திக்கு தனது ரியாக்சனை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ள அந்த செய்தி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளது. இந்த செய்தியை பார்த்து ராஷ்மிகா ’ரொம்ப அதீதமாக கற்பனை செய்கிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ மற்றும் முக்கிய வேடத்தில் ’ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் ’அனிம’ல் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் என பிசியான நடிகையாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments