நயன்தாரா, ஹன்சிகாவை அடுத்து தமன்னாவுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் அடுத்த மாதம் இன்னொரு பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா என்பதும் அதன் பின்னர் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் -இந்தியா நடிகையாக விளங்கி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஓடிடியில் வெளியாகும் வெப்தொடர்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை தொழிலதிபரை நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் மும்பை தொழிலதிபரின் காதலை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ உள்பட ஒருசில படங்களில் தமன்னா நடித்து வரும் நிலையில் திருமணத்திற்கு முன் அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் தமிழ்: இன்றைய அசீம் செயலால் வாக்குகள் சரியுமா? 

கடந்த சில வாரங்களாக அசீம் நாமினேஷன் பட்டியலில் இருந்தாலும் முதல் நபராக சேவ் ஆகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதல் இரண்டு வாரங்கள் அவரது செய்கை சற்று மோசமாக இருந்தாலும்

போனோடும் நெட்டோடும் நல்லா இரும்மா.. விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' சிங்கிள் பாடல்!

 விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். 

எல்லாரும் மாமா வேலை தான் பாக்குறாங்க.. பிக்பாஸ் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்த வனிதா!

பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் மாமா வேலை தான் பார்க்கிறார்கள் என்றும் இது பிக்பாஸ் வீடா? அல்லது மாமா வீடா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் வனிதா கூறியிருப்பது பெரும்

மகாலட்சுமி கர்ப்பமா இருக்கிறாரா? தயாரிப்பாளர் ரவீந்தரின் பதிவால் பரபரப்பு!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை  திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில்

கடைசியில அசீம்-விக்ரமன் சண்டைக்கு இவங்க தான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சிய்ல் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த டாஸ்க் முதலில் ஜாலியாக சென்று கொண்டிருந்தது என்பதை பார்த்தோம்.