close
Choose your channels

கமல், ரஜினி, அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் த்ரிஷா?

Friday, December 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய் என 4 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’தக்லைஃப்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் அடுத்ததாக சல்மான்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் கரன் ஜோகர் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் த்ரிஷா இணைந்துள்ளதால் மீண்டும் அவர் பாலிவுட்டில் கால் பதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களில் த்ரிஷா நடித்துள்ள நிலையில் மீண்டும் இந்தி திரையுலகில் ஒரு சுற்று வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos