close
Choose your channels

முக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை!

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் நெருங்கும் வேளையில் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியில் இணைவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கூட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ’இந்தியன்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்த ஊர்மிளா, நாளை சிவசேனா கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்மிளா அந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சியிலிருந்து விலகினார். இதனை அடுத்து நாளை அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைய இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிவசேனா கட்சியின் சார்பில் அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பாராளுமன்றத்திற்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.