லாக்டவுனுக்கு பின் காதலரை கைப்பிடிக்கின்றாரா வரலட்சுமி?

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக விஷாலை அவர் திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் வெளியானது என்பதும், ஆனால் விஷாலுக்கு சமீபத்தில் அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான சந்தீப், தல தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரத்குமார் மற்றும் சந்தீப்பின் பெற்றோர்கள் நீண்ட கால நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமி மற்றும் சந்தீப் இடையே திடீரென காதல் மலர்ந்ததாகவும்,  இதனை அடுத்து சரத்குமார் மற்றும் சந்தீப் பெற்றோர் சமீபத்தில் சந்தித்து இந்த திருமணம் குறித்து பேசியதாகவும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே வரலட்சுமியின் சகோதரி ரெயானாவும், பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வரலட்சுமி தரப்பில் இருந்து இதற்கு விளக்கமளித்தபோது, வரலட்சுமி தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், இப்போதைக்கு அவர் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறினர்.

More News

10ஆம் வகுப்பு தேர்வில் திடீர் மாற்றம்: புதிய அட்டவணை

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்

லாக்டவுன் எதிரொலி: இ.எம்.ஐ கட்ட முடியாமல் தவிக்கும் பிரபல நடிகைகள்

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்ற காரணத்தால் பல திரையுலக பிரபலங்கள் தவணை முறையில் ஆடம்பர வீடுகள், ஆடம்பர கார்கள் வாங்கியுள்ளனர்

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: 2வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தை மிஸ் செய்த த்ரிஷா?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட 'பேட்ட' நடிகருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றதால் 14 நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்