close
Choose your channels

கணவர் மற்றும் மகள்களுடன் நடிகை விஜி சந்திரசேகர்.. அபூர்வ புகைப்படங்கள்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை விஜி சந்திரசேகர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி குண சித்திர நடிகைகளில் ஒருவர் விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் சகோதிரியான இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான ’தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’இந்திரா’ ’பார்த்தாலே பரவசம்’ ’ஆயுத எழுத்து’ ’ஆரோகணம்’ ’மதயானை கூட்டம்’ ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’கேப்டன் மில்லர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை விஜி சந்திரசேகர், கேப்டன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு சுரக்ஷா மற்றும் லவ்லி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளன. விஜி சந்திரசேகரின் மகள் லவ்லி சமீபத்தில் வெளியான ’அயலி’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகள்கள் மற்றும் கணவருடன் விஜி சந்திரசேகர் இருக்கும் சில அபூர்வ புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment