close
Choose your channels

பாடகி ஸ்வேதா மேனனின் கணவர், குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ வைரல் புகைப்படங்கள்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்வேதா மோகனின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் 700க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் ஸ்வேதா மோகன். இவர் பிரபல பாடகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா, ஏஆர் ரகுமான், வித்யாசாகர், எம்எம் கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், மணி ஷர்மா, தேவிஸ்ரீ பிரசாத், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களின் இசையில் இவர் பாடியுள்ளார் என்பதும் இவரது ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் சூப்பர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சுவேதா மோகன் தனது நீண்ட நாள் காதலரான அஸ்வின் என்பவரை கலந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஸ்ரஸ்டா என்ற பெண் குழந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு பிறந்தது. இந்த நிலையில் ஸ்வேதா மோகனின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.