close
Choose your channels

ஷங்கர் வீட்டில் இன்னொரு மணமகள் ரெடி.. வைரலாகும் அதிதி ஷங்கர் போட்டோஷூட்..!

Sunday, May 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் தற்போது அவரது இளைய மகள் அதிதி ஷங்கர் மணமகள் போல் மேக்கப் போட்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து ஷங்கரின் வீட்டில் இன்னொரு மணமகள் தயாராகி விட்டாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு அவர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் 2 படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை அதிதி ஷங்கர் சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்றுமுன் அவர் மணமகள் போல் மேக்கப் போட்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து ஷங்கர் வீட்டில் இன்னொரு மணமகள் ரெடி என்பது உள்பட பல கமெண்ட்கள் பதிவாகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment