close
Choose your channels

பிங்க் உடையில் ஒரு பேரழகி.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

Thursday, September 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் கார்த்தியின் ’விருமன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான அதிதிஷங்கர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் பதிவு செய்து போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

பிங்க் நிறத்தில் உள்ள சூப்பர் உடையுடன் பேரழகியாக காணப்படும் அவர் பல்வேறு ஸ்டைல் போஸ்களில் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் அவரை வர்ணித்து பதிவு செய்யும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இதில் ஒரு நெட்டிசன் விஜய் அண்ணா கூட எப்போது நடிப்பீர்கள் என்று கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ’விருமன்’ படத்தை அடுத்து தற்போது அதிதிஷங்கர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் சமீபத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.