12 வருடங்களுக்கு முன்.. சிவகார்த்திகேயன் பட நடன இயக்குனரின் மலரும் நினைவுகள்

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 12 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மலரும் நினைவை தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

வினய், சதா நடித்த திரைப்படம் 'உன்னாலே உன்னாலே'. இந்த படத்தில் வினய்யின் நண்பராக சதீஷ் கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னை சிட்டி சென்டரில் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் 12 வருடம் கழித்து அதே சிட்டி செண்டரில் அதே இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படுகிறது. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நடிகராக நடித்த சதீஷ்கிருஷ்ணன், தற்போது 'ஹீரோ' படத்தின் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார். இந்த அபூர்வ ஒற்றுமையை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், இவானா, விவேக், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் 'பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

அஜித், விஜய் பட இயக்குனருடன் இணைந்த த்ரிஷா!

அஜித் நடித்த 'ஆசை' மற்றும் விஜய்-சூர்யா இணைந்து நடித்த 'நேருக்கு நேர்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த்.

கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு!

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'நான் ஈ' மற்றும் விஜய் நடித்த 'புலி' போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்ற அமீரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி!

தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு அதிருப்தியானவர்களாக இருந்தாலும் அதில் யார் பெட்டர் என்பதை தேர்வு செய்துதான்

காப்புரிமை பிரச்னையில் இளையராஜா: நீதிமன்ற உத்தரவின் முழுவிபரங்கள்

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி இன்றி பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆன்லைன் வானொலிகள் உள்பட அனைத்திலும் அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தல அஜித்துடன் நடித்த 'விஸ்வாசம்', சிவகார்த்திகேயனுடன் நடித்த' மிஸ்டர் லோக்கல், மற்றும் முக்கிய வேடத்தில் நடித்த 'ஐரா' ஆகிய மூன்று திரைப்படங்கள்