close
Choose your channels

கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'நான் ஈ' மற்றும் விஜய் நடித்த 'புலி' போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிச்சா சுதீப் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம், குத்துச்சண்டையை அடிப்படையாக கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் தமிழ் டைட்டில் 'பயில்வான்' என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணா என்ற குத்துச்சண்டை வீரர் கேரக்டரில் கிச்சா சுதீப் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் 25 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவான ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாகி வருவதாகவும், இந்த படத்தில் மலையாளம் தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் கிச்சா சுதீப் தானே சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.