close
Choose your channels

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தல அஜித்துடன் நடித்த 'விஸ்வாசம்', சிவகார்த்திகேயனுடன் நடித்த' மிஸ்டர் லோக்கல், மற்றும் முக்கிய வேடத்தில் நடித்த 'ஐரா' ஆகிய மூன்று திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. மேலும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் இம்மாதமும், தளபதி 63' மற்றும் 'சயிர நரசிம்மரெட்டி' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டும் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் நயன்தாரா நடித்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதுதான் அவர் நடித்து வந்த மலையாள திரைப்படமான 'லவ் ஆக்சன் டிராமா'. இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நிவின்பாலி, நயன்தாரா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் ஸ்வீட் பரிமாறிக்கொண்ட புகைப்படமும் வெளிவந்துள்ளது.

நிவின்பாலியுடன் நயன்தாரா நடித்த இந்த படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.