close
Choose your channels

அமிதாப், நானியை அடுத்து மேலும் 2 பிரபலங்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தலைவர் 170' ..!

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ திரைப்படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி இந்த படத்தில் பிரபல மலையாள நட்சத்திரங்களான பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் இணைந்து உள்ளதாக தெரிகிறது.

இந்த படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் நாளுக்கு நாள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment