close
Choose your channels

அமுதவாணன், ஷிவின், மைனா, அசீமை தொடர்ந்து கடைசி புரமோ வெளியீடு!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் உடன் முடிவடைய இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து கூறும் புரமோ வீடியோக்களை பிக் பாஸ் வெளியிட்டு வந்தார் என்பதை பார்த்தோம்.

நேற்று அமுதவாணன், ஷிவின் மற்றும் மைனா ஆகியோர்களின் புரமோ வெளியான நிலையில் இன்று காலை அசீம் புரமோ வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் கடைசி புரமோ விக்ரமனுக்காக வெளியாகி உள்ளது.

அதில் சக மனிதர்களை மதிக்க தெரிந்த ஒருவரை அடையாளம் காட்டியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பிக்பாஸ் கூறினார் அப்போது விக்ரமன், ‘தமிழ்நாட்டின் மிகவும் பிரம்மாண்டமான ஷோ என்பதை தாண்டி ரொம்ப ரொம்ப தேவையான ஷோவாக பிக்பாஸ் இருக்கின்றது, இந்த ஜனரஞ்சகமான மேடையில் வாய்ப்பு கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல, இது ஒரு புரட்சி’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பிக்பாஸ், ‘இது என்ன புரட்சி? நீங்கள் வெளி உலகத்திற்கு போய் செய்ய போகும் புரட்சிகளை பார்ப்பதர்கு நாங்கள் ஆவலாக இருக்கிறோம் என்று கூறினார். இதனை அடுத்து விக்ரமன் ’அறம் வெல்லும் என்று கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் அமுதவாணன் நேற்று ரூபாய் 13 லட்சம் பணப்பெட்டியை எடுத்துச் சென்ற நிலையில் விக்ரமன், ஷிவின், அசீம் மற்றும் மைனா ஆகிய நால்வரில் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.