close
Choose your channels

103 நாட்கள் இருந்த மைனாவுக்கு சம்பளம் இவ்வளவுதானா? அப்ப அமுதவாணன் தான் புத்திசாலி!

Saturday, January 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மைனா, திடீரென நேற்று மிட்நைட் எவிக்சன் காரணமாக வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதற்கு முந்தைய நாள் தான் ரூபாய் 11.75 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனாவும் வெளியேற இதை அடுத்து தற்போது விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவரை நாளை கமல்ஹாசன் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிட் வீக் எவிக்சனாக வெளியேற்றப்பட்ட மைனாவின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. மைனாவுக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் 103 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு சம்பளம் கிட்டத்தட்ட 25.75 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் மைனாவுக்கு ஒரு நாள் முன் வெளியேறிய அமுதவாணனுக்கும் தினமும் 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்ட நிலையில் சம்பளத்தோடு அவருக்கு பணப்பெட்டியில் கிடைத்த 11.75 லட்சம் ரூபாயையும் சேர்த்தால் அவருக்கு கிட்டத்தட்ட 37 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் டைட்டில் தனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று சுதாரித்துக் கொண்ட அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கடைசி நேரத்தில் வெளியேறியதால் அவருக்கு மிகப்பெரிய தொகை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை தான் இறுதி போட்டியில் இருப்போம் என்று நினைத்த மைனாவுக்கு வெறும் ஏமாற்றமே கிடைத்தாலும், மைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பதும் இறுதிப் போட்டியில் உள்ள மூவரை ஒப்பிடுகையில் அவர் எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.