close
Choose your channels

'தக்லைஃப்' படத்தில் இருந்து விலகல்: அடுத்த சில நிமிடங்களில் பிரபல நடிகரின் முக்கிய அறிவிப்பு..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி விலக இருப்பதாக செய்தி வெளியான சில நிமிடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் இன்னொரு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த ’தக்லைஃப்’ படத்தில் இருந்து திடீரென துல்கர் சல்மான் விலகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியும் விலகி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த இரு நடிகர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி விலகியதாக செய்திகள் கசிந்த சில நிமிடங்களில் அவர் நடித்து வரும் ’ஜெனி’ என்ற படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ’ஜெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை 2 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெயம் ரவி நடிப்பில், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெனி’ படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் வாமிகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.