close
Choose your channels

'குட் நைட்' 'லவ்வர்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. போஸ்டர் வைரல்..!

Wednesday, June 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் மணிகண்டன் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக நடிக்க இருப்பவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீரா ரகுநாத் நடித்த ’குட் நைட்’ திரைப்படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார் என்பதும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனம் நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுத்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ஆண்டு ‘லவ்வர்’ என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்திலும் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படமும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டு அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த மில்லியன் டாலர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் இயக்குனர் உட்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment
Comment