close
Choose your channels

குஷ்புவை அடுத்து இளமைக்கு திரும்பிய சினேகா: வைரல் புகைப்படங்கள்!

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டில் பிரபல நடிகையாக இருந்த குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நிலையில் அதே போல அதே காலகட்டத்தில் முன்னணி நாயகியாக இருந்த சினேகாவும் தற்போது 20 வருடத்திற்கு முந்தைய சினேகா போல் மாறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போதும் அவர் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை சினேகா தீவிர உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாகி வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது 20 வருடத்துக்கு முன்னர் பார்த்த சினேகா மாதிரி ஸ்லிம்மாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ’நீங்கள் ஒரு சவாலை எதிர் கொண்டால் மட்டுமே மாற்றத்தையும் பெற முடியும்’ என்று கேப்ஷனாக சினேகா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.