close
Choose your channels

திருமணத்திற்கு பின் பழங்குடியின பெண்ணாக மாறிய ஹன்சிகா.. வைரல் புகைப்படம்!

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடந்த நிலையில் அவர் திருமணத்திற்குப் பின் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமொன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது. அதில் ஒரு வேடம் பழங்குடியின பெண் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை ஹன்சிகா தனது தொழில் பார்ட்னரான கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காந்தாரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹன்சிகா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும், அதில் ஒரு வேடத்தில் அவர் பழங்குடியின பெண் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கிய இந்தப் படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட ஏமோஷனல் படம் என்றும் ஹன்சிகாவுக்கு இதுவரை இல்லாத அளவில் ஐந்து மணிநேரம் மேக்கப் போடும் கேரக்டர் என்றும் இயக்குனர் ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மகாபாரதத்தில் உள்ள காந்தாரி கேரக்டரின் தழுவல் தான் ஹன்சிகா நடிக்கும் இந்த கேரக்டர் என்றும் காந்தாரி என்பதற்கு அம்மன் என்ற இன்னொரு பெயர் என்று என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சிரிஷ் நடித்திருக்கும் நிலையில் சிரிஷ் மற்றும் ஹன்சிகா ஆகிய இருவருக்கும் இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் ஸ்டண்ட் சில்வா தான் ஸ்டண்ட் இயக்குனராக இந்த படத்தில் பணி புரிந்துள்ளார் என்றும் ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment