ரஜினி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம்.. பான் - இந்திய நடிகர் ஹீரோவா

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய், ரஜினிகாந்த் படங்களை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபாஸை சந்தித்த லோகேஷ் கலைராஜ் ஒன்லைன் கதையை கூறியதாகவும் அந்த கதை பிரபாஸுக்கு பிடித்து விட்டதை அடுத்து இருவரும் முதல் முறையாக இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போது பான் - இந்தியா நடிகராக மாறிவிட்டதால் இந்த படமும் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் ’கைதி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஓடிடியில் 1.2 மில்லியன் பார்வைகள்..  உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான

நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு? சர்ச்சை ஆனதால் விளக்கம்!!

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது

6 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

 6 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் கலை இயக்குனர்  நிதின் தேசாய் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அதிசயத்திற்கு முன் லிப் கிஸ்… ஹாலிடே சென்ற பிரபல நடிகையின் அசத்தல் புகைப்படம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு மீண்டும் எண்ட்ரி கொடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.