close
Choose your channels

நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு? சர்ச்சை ஆனதால் விளக்கம்!!

Wednesday, August 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தனக்கு எதற்காக ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து அவரே அளித்துள்ள விளக்கம் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத், தான் நடித்த ‘மணிகர்னிகா’ திரைப்படம் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து அதே பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி அவர் சமீபத்தில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படி நடிப்பு, இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு அவதாரங்களுக்கு மத்தியில் நடிகை கங்கனா தொடர்ந்து சமூக விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். ஆனால் இவர் ஒருபக்க சார்பாக தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து சமூகவலைத் தளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் எமெர்ஜென்சி காலக்கட்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் ‘எமெர்ஜென்சி‘ திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு நடிகை கங்கனாவிற்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் சிலர் விமர்சித்து கமெண்ட் வெளியிட்டு இருந்தனர். அதுவும் சமீபகாலகமாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகர் ரன்பீர் கபூரின் சொந்த வாழ்க்கை குறித்து அவர் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் எப்போதும் ரன்பீரையும் ஹிருத்திக்கையும் குறித்து பேசிவரும் நடிகை கங்கனா எங்கே எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த கமெண்ட்களுக்கு பதிலளிக்கும் வகையில் மூத்த அரசியல்வாதி மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி ‘அவர் எங்கு இருக்கிறார் என்பது சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கே (எஸ்பிஜி) தெரியும். இந்தி நடிகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எஸ்பிஜியின் வேலை இல்லை. கங்கனாவுக்கு பாதுகாப்பு அளித்து இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது‘ என தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து இருக்கும் எதிர்ப்பு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கங்கனா தற்போது ‘நான் இந்தி நடிகை மட்டுமல்ல சார், குரல் கொடுக்கும் சமூக அக்கறையுள்ள குடிமகள். மராட்டியத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் எனக்கு எதிராக உள்ளனர். நான் துக்டே கும்பல் மற்றும் காலிஸ்தானி குழுக்களை வன்மையாக கண்டித்தேன்.

நானும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், மற்றும் எனது அடுத்த தயாரிப்பான எமெர்ஜென்சி படத்தில் பல முக்கிய விஷயங்களை பேசியுள்ளேன். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு கேட்டேன். கிடைத்திருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது சார் எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு கொடுத்தது குறத்து ரசிகர்கள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி போன்ற பிரபலங்கள் விமர்சித்து கருத்து வெளியிட்டு வந்த நிலையில் அதற்கு நடிகை கங்கனாவே விளக்கம் அளித்து வெளியிட்டு இருக்கும் கருத்துகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos