ரஜினியை அடுத்து 'லியோ' படம் பார்த்த கமல்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே பார்த்து, தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து உள்ளீர்கள் உங்கள் படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியை அடுத்த தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் ‘லியோ’ படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும், படத்தை பார்த்து முடித்ததும் கமல்ஹாசன் ‘லியோ’ படம் குறித்து தனது கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘லியோ’ படத்தில் கமல்ஹாசன் கடைசி காட்சியில் தனது குரலை மட்டும் பதிவு செய்திருப்பார் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஏற்கனவே ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பல பெரிய திரை மற்றும் சின்ன திரையினர் பார்த்து ரசித்து, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் ரட்சிதா மகாலட்சுமி வீட்டில் நேர்ந்த துக்கம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சின்னத்திரை நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ரட்சிதா மகாலட்சுமியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான நிலையில் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் அவருக்கு ஆறுதல்

இ.எஸ்.ஐ. பணத்தில் முறைகேடு.. நடிகைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!

https://www.maalaimalar.com/news/state/high-court-orders-rejection-of-appeal-by-actress-jayaprada-who-sought-suspension-of-prison-sentence-676424

'கருமேகங்கள் கலைகின்றன' உட்பட இந்த வார ஓடிடி திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் மட்டுமே இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ஓடிடியில் 'கருமேகங்கள் கலைகின்றன' உள்பட  3 திரைப்படங்கள் மற்றும்

மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. என்ன ஆச்சு நடிகை சுனைனாவுக்கு?

நடிகை சுனைனா மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வியை

'லியோ' படத்தின் முதல் நாள் வசூல்.. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் இணையதளங்களில் வைரல் ஆனது.