close
Choose your channels

'தளபதி 67' படத்தை அடுத்து இந்த படம் தான்: உறுதி செய்த பிரபல நடிகர்!

Wednesday, August 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய்தத், பிரித்விராஜ், அர்ஜூன், த்ரிஷா, சமந்தா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை முடித்தவுடன் ’கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ’விருமன்’ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது என கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார் .

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் படத்தை இயக்க உள்ளார் என்றும், அந்த படத்தை முடித்தவுடன் ’கைதி 2’ படத்தை தொடங்கவுள்ளோம் என்றும் கார்த்தி கூறியுள்ளார். இதனை அடுத்து லோகேஷின் அடுத்த படம் ‘கைதி 2’ என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment