close
Choose your channels

உதயநிதி, கமல், விஜய்யை அடுத்து தனுஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் புகைப்படம்..!

Monday, May 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமைச்சர் உதயநிதி, உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் நெப்போலியன் ஆகியோர்களை அடுத்து தனுஷ் செய்த தரமான சம்பவம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக பெரிய நடிகர்கள் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவி செய்து வருகின்றனர் என்பதையும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கி நடிகர் சங்க கட்டிடத்தின் பணியை மீண்டும் தொடங்க வழி வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் மற்றும் நெப்போலியன் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியதாகவும் சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கியதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் நெப்போலியன், ஆகியோர்களை அடுத்து நடிகர் தனுஷ் தனது சார்பில் ஒரு கோடி ரூபாய் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நிதி உதவி அளித்துள்ளார். அவர் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் இந்த நிதியை அளித்த போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment