close
Choose your channels

'வணங்கான்' படத்தை அடுத்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகுகிறாரா சூர்யா?

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ’வணங்கான்’ என்ற திரைப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தில் அதர்வா அல்லது அருண்விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் திடீரென ‘வாடிவாசல்’ படத்திலிருந்தும் சூர்யா விலகல் உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பின்னர் இன்னும் டெஸ்ட் படப்பிடிப்பு தவிர படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் ஒரு பக்கம் ’விடுதலை’ படப்பிடிப்பில் பிசியாக வெற்றிமாறனும் ’சூர்யா 42’ படத்தில் சூர்யா பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதால் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ‘வாடிவாசல்’ படக்குழுவினர் கூறியபோது ‘வாடிவாசல்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் டிராப் ஆக வாய்ப்பே இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment