விஜயகாந்தை அடுத்து ரஜினியை சந்தித்த டி.ராஜேந்தர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் இன்று அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இன்று ரஜினிகாந்த்தை டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனுடன் அவரது இல்லத்தில் சந்தித்து, குறளரசனின் திருமண அழைப்பிதழை அவருக்கு நேரில் வழங்கினார். குறளரசனின் திருமணத்திற்கு ரஜினியும் வருவதாக கூறியுள்ளதாக செய்திக்ள் வெளிவந்துள்ளது.
குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையில் அவர் நபீலா அஹ்மது என்பவரை வரும் 28ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும், திருமணத்தை அடுத்து ஐடிசி சோழாவில் இரவு 7 மணிக்கு வரவேற்பு நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த திருமணம் மற்றும் வரவேற்பு விழாவுக்கு கோலிவுட்டின் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments