close
Choose your channels

விக்ரமை அடுத்து மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா: ரோலக்ஸ்க்கு இணையாக இருக்குமா?

Friday, August 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடம் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்த சூர்யா நடிப்பில் கலக்கி விட்டார் என்து தெரிந்ததே. அவரது ஐந்து நிமிட ரோலக்ஸ் கேரக்டர் அடுத்த பாகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சூரரைப்போற்று ஹிந்தி பதிப்பில் சூர்யா ஒரு சில காட்சிகள் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்திலும் சூர்யா ஒரு பவர்ஃபுல் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் பத்து நிமிடம் திரையில் தோன்றும் அளவுக்கு இந்த கேரக்டர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கேரக்டருக்கு இணையாக ’ஆர்சி 15’ படத்தில் சூர்யாவின் கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகமாகி உள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். அதன்பின்பு அவர் சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, ஞானவேல் ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos