close
Choose your channels

அச்சு அசலாக த்ரிஷாவின் 'குந்தவை' லுக்: பிக்பாஸ் தமிழ் நடிகையின் அசத்தலான புகைப்படம்!

Sunday, August 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை பிராட்டி கேரக்டரில் நடித்திருந்த த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் அதே லுக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் போட்டோஷுட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ குந்தவை கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்திருந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பதாக அவரது புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ குந்தவை கேரக்டரில் நடித்து இருந்த த்ரிஷாவின் லுக்கை அச்சுஅசலாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதி போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது, இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் குந்தவை குறித்து அமரர் கல்கி வர்ணித்த வரிகளையும் பதிவு செய்துள்ளார். அவை பின்வருமாறு:


குந்தவை செந்தாமரை நிறத்தினள்

குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது.

குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன.

குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது.
குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது.

குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.“
-கல்கி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment