'வாரிசு' படத்தில் இந்த காட்சி எங்கே? குஷ்புவிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,January 11 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் பாசிட்டிவ் வசனங்களை பெற்று வருகிறது. பொங்கல் திருநாளில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக வாரிசு படம் இருக்கும் என பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் குஷ்பு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது வெளியான புகைப்படங்களும் வைரலாகியது.

இந்த நிலையில் இன்று ’வாரிசு’ வெளியாகி உள்ள நிலையில் அதில் குஷ்பூ நடித்த காட்சி இல்லாததை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து விஜய், ராஷ்மிகாவுடன் குஷ்பு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டு நீங்கள் நடித்த இந்த காட்சி படத்தில் எங்கே? என்ன கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு குஷ்பு என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

’வாரிசு’ படத்தில் சங்கீதா மற்றும் ராஷ்மிகாவின் அம்மாவாக குஷ்பு நடித்திருந்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


 

More News

சிறுவயது முதலே தொடரும் பழக்கம்.. இந்த ஆண்டின் முதல் இதுதான்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதாகவும் இந்த ஆண்டு படித்த முதல் புத்தகம் இதுதான் என்றும் புகைப்படத்துடன் கூடிய

கர்ப்பமானதை ஞாபகம் வைத்து கொள்ள நமீதா செய்த செயலை பாருங்க.. வைரல் வீடியோ

நடிகை நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இரட்டை குழந்தைகள் பெற்ற நிலையில் அவர் தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக செய்த செயல் குறித்த வீடியோ

தென்னிந்திய திரைப்படத்திற்கு கோல்டன் குளோப் விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்களை விட தென்னிந்திய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில்

ப்ரியா அட்லியின் கர்ப்பிணி போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் சமீபத்தில்

பிரபல சீரியல் நடிகைக்கு விபத்து.. அதிர்ச்சி வீடியோ

பிரபல சீரியல் நடிகை விபத்தில் சிக்கிய நிலையில் காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.