close
Choose your channels

சிறுவயது முதலே தொடரும் பழக்கம்.. இந்த ஆண்டின் முதல் இதுதான்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Wednesday, January 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதாகவும் இந்த ஆண்டு படித்த முதல் புத்தகம் இதுதான் என்றும் புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’3’ ’வை ராஜா வை’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவரது பதிவுகள் வைரலாகும் என்பது தெரிந்ததை. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பதாகவும் அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் புத்தகம் ’தி சீக்ரெட்’ என்ற புத்தகத்தை படித்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.