close
Choose your channels

கர்ப்பமானதை ஞாபகம் வைத்து கொள்ள நமீதா செய்த செயலை பாருங்க.. வைரல் வீடியோ

Wednesday, January 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இரட்டை குழந்தைகள் பெற்ற நிலையில் அவர் தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக செய்த செயல் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பதும் அவர் தனது குழந்தைகள் குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என தனது இரட்டைக் குழந்தைகளுக்கு நமீதா பெயர் வைத்துள்ள நிலையில் நடிகை நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தனது வீட்டில் செய்து வைத்திருக்கிறார். இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.