close
Choose your channels

வேற லெவல் வெறித்தனமான வொர்க்-அவுட்.. ஐஸ்வர்யா ரஜினியின் லேட்டஸ்ட் வீடியோ..!

Wednesday, April 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா சமீபத்தில் ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து அடுத்த படத்திற்காக அவர் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது அவர் தனது சமூக வலைதளங்களில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ மற்றும் குடும்ப புகைப்படங்களையும் பதிவு செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சற்றுமுன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் லைக் செய்து வந்தாலும் சில அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.