close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதா? கெளதம் மேனனின் அதிரடி முடிவு..!

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது காட்சிகள் அனைத்தையும் கௌதம் மேனன் நீக்கிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. இந்த படம் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகிய இணையத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன் உட்பட பலர் நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் ஐஸ்வர்யா, ராஜேஷ் ஆகிய இருவருக்கும் ஒரு பாடல் இருந்தது என்றும் ’ஒரு மனம்’ என்ற அந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல் படி ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டதாகவும் ’ஒரு மனம்’ பாடலும் படத்தில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘துருவ நட்சத்திரம்’ பாடலில் இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ’துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா நடித்த காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியுள்ளார். அந்தோணி படத்தொகுப்பில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos