close
Choose your channels

'கங்குவா' படத்திற்கு இத்தனை மணி நேரம் மேக்கப்பா? சூர்யாவின் டெடிகேஷன்..!

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் சரித்திர கால காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரித்திர கால காட்சிகளுக்காக சூர்யா சுமார் இரண்டரை மணி நேரம் மேக்கப்புக்காக மட்டும் செலவு செய்வதாகவும் அதுமட்டுமின்றி அதிகாலை 6:30 மணிக்கு முதல் ஷாட்டுக்கு அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது

சில கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று படப்பிடிப்பிற்காக சூர்யா செல்வது, மேக்கப்பிற்காக மணிக்கணக்கில் செலவு செய்வது ஆகியவை அவரது டெடிகேஷனை காட்டுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் இந்த படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மறுநாள் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் அதை பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos