close
Choose your channels

துணிவா? வாரிசா? டாஸ் போட்டு முடிவு செய்த ரசிகர்கள்

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் கிட்டத்தட்ட சம அளவில் திரையரங்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அந்தமானில் 3 திரையரங்குகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு திரையரங்கில் ’வாரிசு’ மற்றும் இன்னொரு திரையரங்கில் ’துணிவு’ ஆகிய படங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்றாவது திரையரங்கு எந்த படத்துக்கு ஒதுக்குவது என்ற பிரச்சனை வந்தது.

இதனை அடுத்து திரையரங்க நிர்வாகிகள் முன்னிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் மூன்றாவது திரையரங்கில் எந்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதை முடிவு செய்ய டாஸ் போட திட்டமிட்டனர்.

இதனை அடுத்து மூன்றாவது ஸ்கிரீன் யாருக்கு என தியேட்டர் நிர்வாகம் முன்னிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் டாஸ் போட்ட நிலையில் அதில் ’துணிவு’ வென்றதை அடுத்து அஜித் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து அந்தமானில் உள்ள 3 திரையரங்குகளில் இரண்டில் ’துணிவு’ திரைப்படமும் ஒரு திரையரங்கில் ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos