close
Choose your channels

இந்த மாதிரி ஒரு அட்டாக்கை இந்தியா யோசித்து கூட பார்த்திருக்காது: 'பதான்' டிரைலர்

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

YRF நிறுவனத்தின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் பிரமாண்டமாக உள்ளது என்பது இந்த படத்தின் இரண்டு நிமிட டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

இந்தியாவை தாக்க திட்டமிடும் தனியார் தீவிரவாத அமைப்பு எடுக்கும் முயற்சியை ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் பணத்தை தண்ணீராக செலவழித்து உள்ளார்கள் என்பதும் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.

மொத்தத்தில் ஒரு தேசப்பற்றுள்ள கேரக்டரில் ஷாருக்கான் மற்றும் தீபிகா நடித்துள்ளதால் அவர்களைப் பற்றிய முந்தைய சர்ச்சைகள் இந்த படம் வெளியானதும் அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.